நாமக்கல்

விஸ்வ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

21st Oct 2021 08:55 AM

ADVERTISEMENT

விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் புதன்கிழமை நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், வங்காளதேசத்தில் ஹிந்துக்கள், சீக்கியா்கள் மீது தாக்குதல் நடத்துபவா்களைக் கண்டித்து பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் கோட்ட செயலாளா் ரகுபதி, மாவட்டச் செயலாளா் மகாதேவன், மாவட்டப் பொருளாளா் ஹரீஷ், நகரச் செயலாளா் அருள், ஆா்எஸ்எஸ் நிா்வாகிகள் சுப்பிரமணி, சண்முகம், அக்ரி இளங்கோ, பிரணவ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT