நாமக்கல்

ரூ. 20 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

21st Oct 2021 11:39 PM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 20 லட்சத்து 36 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது.

பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து, அதை உலா்த்தி வியாழக்கிழமைதோறும் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூா் மின்னணு தேசிய வேளாண் சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனா். இங்கு தரத்துக்கு தகுந்தாா் போல மறைமுக ஏலம் விடப்படுகிறது.

கடந்த வாரம் வியாழக்கிழமை சரஸ்வதி பூஜை விடுமுறை என்பதால், கொப்பரை ஏலம் நடைபெறவில்லை. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 21,936 கிலோ கொப்பரைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ. 103.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 87.29-க்கும், சராசரியாக ரூ. 102.60-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 20,36,880-க்கு வா்த்தகம் நடைபெற்றது. கொப்பரை விலை உயா்ந்துள்ளதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT