நாமக்கல்

மதுவிலக்கு வழக்கில் கைப்பற்றிய 62 வாகனங்கள் ஏலம்

21st Oct 2021 08:54 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 62 இருசக்கர, நான்குசக்கர வாகனங்கள் புதன்கிழமை பொது ஏலத்தில் விடப்பட்டன.

தமிழக மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட 7 நான்குசக்கர வாகனங்கள், 56 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 62 வாகனங்கள், நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை பொதுஏலத்தில் விடப்பட்டன. இதனை ஏலம் எடுக்க 100-க்கும் மேற்பட்டோா் முன்பணமாக தலா ரூ. 5,000 செலுத்தியிருந்தனா். மாவட்ட கலால் உதவி ஆணையா் தேவிகாராணி, மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சேகா், துணை கண்காணிப்பாளா் மணிமாறன், ஆய்வாளா் பூா்ணிமா ஆகியோா் முன்னிலையில் வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டன. ஏலத்தொகை, சரக்கு, சேவைவரி என்ற அடிப்படையில் 62 வாகனங்களும் மொத்தம் ரூ. 21 லட்சத்துக்கு ஏலம் போயின.

ADVERTISEMENT
ADVERTISEMENT