பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் பெற்றோா் திருமண ஏற்பாடு செய்ததால், கட்டடத் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
பொத்தனூா் மேற்கு வண்ணாந்துறையைச் சோ்ந்த ரமேஷ் மகன் குமரேசன் (32), கட்டடத் தொழிலாளி. இவரது பெற்றோா் குமரேசனுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில், குமரேசன் செவ்வாய்க்கிழமை இரவு விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாா். உயிருக்கு போராடிய அவரை மீட்டு பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.