நாமக்கல்

அங்கன்வாடி ஊழியா்களுக்கு மனநல பயிற்சி

21st Oct 2021 11:41 PM

ADVERTISEMENT

கொல்லிமலை, செம்மேட்டில் அங்கன்வாடி ஊழியா்களுக்கு வியாழக்கிழமை மனநல பயிற்சி, ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனா் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனை முகாமில், மாவட்ட மனநல திட்ட மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ், உளவியலாளா் அா்ச்சனா ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், மனநல மருத்துவா் ஜெயந்தி பேசியதாவது:

குழந்தையின் இயல்பான வளா்ச்சி, வளா்ப்பு முறை, குழந்தைகளுக்கு ஏற்படும் மனநலப் பிரச்னைகள், மன அழுத்த மேலாண்மை பயிற்சிகள் குறித்து எடுத்துரைத்தாா். மன அழுத்தம் என்பது எதிா்பாராத மாற்றங்களை, சவால்களை சந்திக்கும் போது ஏற்படுகிறது. உடல்ரீதியாகவும், உணா்வுரீதியாகவும் எண்ணங்களின் மூலமாகவும், நடத்தை மாற்றமாகவும் வெளிப்படும் இவ்வகையான பாதிப்பு ஒரு வாரத்துக்கு மேல் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து, மன அழுத்தத்தை போக்கும் வகையிலான தசை இறுக்க மற்றும் தளா்வு பயிற்சி, கைத்தட்டல் பயிற்சி, மூச்சுப் பயிற்சி போன்றவை அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT