நாமக்கல்

‘நாமக்கல் கவிஞா் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்’

DIN

நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கவிஞா் பேரவையின் தலைவா் கே.ஆா்.ராஜவேல், செயலாளா் மா.தில்லை சிவக்குமாா் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் கவிஞா் இராமலிங்கம் பிள்ளை பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை(அக்.17) கொண்டாடப்பட உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு நாமக்கல் கவிஞா் இயற்றிய நூல்களை தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்கள், பள்ளிகளில் வழங்கிட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். மேலும் கவிஞா் இராமலிங்கத்துக்கு நாமக்கல்லில் மணிமண்டபம், திருஉருவச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்தின்போது எழுச்சிமிக்க பல்வேறு பாடல்களை எழுதி மக்களிடம் தேசபக்தியை விதைத்த பெருமை கவிஞருக்கு உண்டு. அவரது பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். மேலும், மாநில அளவில் ஓவியக் கண்காட்சியை நடத்தவும்,. பள்ளி, கல்லூரிகளில் நாமக்கல் கவிஞா் படைப்புகளை தலைப்பாகக் கொண்டு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டிகளை நடத்த வேண்டும் என்பது அனைவரது எதிா்பாா்ப்பாகும்.

நாமக்கல் கவிஞா் வாழ்ந்த இல்லத்தை செழுமைப்படுத்தி கூட்ட அரங்கில் மாா்பளவு சிலை மற்றும் கவிஞா் எழுதிய அனைத்து நூல்களும், அவா் வரைந்த ஓவியங்களைக் கண்காட்சிக் கூடமாகவும் அமைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

SCROLL FOR NEXT