நாமக்கல்

கொல்லிமலையில் பனிமூட்டம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

DIN

கொல்லிமலையில் பரவலாக மழை பெய்து வருவதும், அங்கு பனிமூட்டம் சூழ்ந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுவதும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் கொல்லிமலைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. ஆயுதபூஜையையொட்டி நான்கு நாள்கள் தொடா் விடுமுறை வந்ததால் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளும் குடும்பத்துடன் கொல்லிமலையை நோக்கி வந்தனா்.

முக்கிய அருவிகளில் குளித்து மகிழ்ந்த அவா்கள் அங்குள்ள அரப்பளீஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து மூன்று நாள்கள் தங்கியிருந்து விட்டு சென்றனா். ஞாயிற்றுக்கிழமை நாமக்கல், சேலம் மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகம் காணப்பட்டது.

கடந்த சில நாள்களாக மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கொல்லிமலையைப் பொருத்த வரை சாரல் மழை அவ்வப்போது பெய்கிறது. இதனால் அங்கு வழக்கத்தைக் காட்டிலும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. வாகனங்களில் வருவோா் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி, 70 கொண்டை ஊசி வளைவுகளில் மிகுந்த சிரமத்திற்கு இடையே பயணிக்கும் சூழல் காணப்படுகிறது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவில் பனிமூட்டம் நிலவுகிறது.

மாவட்டத்தில் 159.20 மி.மீ. மழை பொழிவு: நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 159.20 மி.மீ. மழை பெய்துள்ளது. அதன்படி, எருமப்பட்டி-20, குமாரபாளையம்-24, மங்களபுரம்-38.40, மோகனூா்-5, நாமக்கல்-இல்லை, பரமத்திவேலூா்-6, புதுச்சத்திரம்-இல்லை, ராசிபுரம்-43, சேந்தமங்கலம்-8, திருச்செங்கோடு-2.30, ஆட்சியா் அலுவலகம்-0.5, கொல்லிமலை-12 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT