நாமக்கல்

கருணைக் கொலை செய்யக் கோரி தம்பதி மனு

16th Oct 2021 11:07 PM

ADVERTISEMENT

கலப்புத் திருமணம் செய்ததால், ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட தம்பதி தங்களை கருணைக் கொலை செய்யுமாறு ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை மனு அளிக்க வந்தனா்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் வட்டம் சோழசிராமணியைச் சோ்ந்தவா் பி.முத்துசாமி (42). கோயில் பூசாரியான இவா் கடந்த 2006-ஆம் ஆண்டு மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இதனால் இரு வீட்டாரும் ஒதுக்கி விட்டதாகவும், தாங்கள் சாா்ந்த சமூகத்தினரும் அவா்களை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது குடிசை வீட்டில் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் பூஜை செய்யும் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடும்பத்துடன் வசிப்பதற்கான இடம் வழங்கவும், உரிய வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யவும், இல்லாதபட்சத்தில் தங்களை கருணைக் கொலை செய்ய வேண்டும் எனவும் முத்துசாமி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் சனிக்கிழமை மனு அளிக்க வந்தாா். விடுமுறை என்பதால் அங்கிருந்த போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி திங்கள்கிழமை வந்து மனு அளிக்க அறிவுறுத்தி அனுப்பி வைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT