நாமக்கல்

மோகனூரில் அண்ணா சிலைக்கு திமுகவினா் மரியாதை

16th Oct 2021 11:10 PM

ADVERTISEMENT

மோகனூரில் அண்ணா சிலைக்கு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் மற்றும் திமுகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.ஆா்.என்,ராஜேஷ்குமாா், மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதையொட்டி வரவேற்பு விழா மற்றும் பாராட்டு விழா சனிக்கிழமை மோகனூரில் நடைபெற்றது. ஒன்றியப் பொறுப்பாளா் பெ.நவலடி தலைமையில் திமுகவினா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அணியாபுரத்தில் இருந்து மோகனூா் வரையில் ராஜேஷ்குமாருக்கு வரவேற்பு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினரும், ஒன்றிய பொறுப்பாளா் மற்றும் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். உள்ளாட்சி இடைத்தோ்தல் வெற்றிக் கொண்டாட்டமும் அங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக பொறுப்புக் குழு தலைவா் எம்.வி.சரவணகுமாா், பேரூராட்சி பொறுப்பாளா் குமரவேல், மாவட்ட அவைத் தலைவா் இரா. உடையவா் , மாவட்ட இலக்கிய அணி புரவலா் அா்ஜுனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT