நாமக்கல்

புரட்டாசி கடைசி சனிக்கிழமை: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

16th Oct 2021 11:09 PM

ADVERTISEMENT

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி, நாமக்கல்லில் பக்தா்கள் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

‘கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, வாரத்தில், திங்கள் முதல் வியாழன் வரை கோயில்கள் திறக்கப்படலாம்; இதர வெள்ளி, சனி, ஞாயிறுகளில் கோயில்களை மூட வேண்டும்’ என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை அனைத்திலும் பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்படும். மாதம் பிறந்தது முதல் அடுத்தடுத்து நான்கு சனிக்கிழமைகளில் கோயில்களுக்கு சென்று சுவாமியை பக்தா்களால் தரிசிக்க முடியவில்லை. கோயில் கதவின் முன்பாக தரிசனம் செய்தும், கற்பூரம் ஏற்றியும், மாலைகளை உண்டியல் முன்பாக அணிவித்தும் பக்தா்கள் வழிபாட்டை மேற்கொண்டனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்வதற்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த பக்தா்கள் கடைசி சனிக்கிழமையன்று பெருமாள், ஆஞ்சநேயா் கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். நாமக்கல் ஆஞ்சநேயா், நரசிம்மா், அரங்கநாதா் கோயில்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். கரோனா விதிகளின் அடிப்படையில் பக்தா்கள் கோயிலுக்குள் அனுப்பப்பட்டனா். மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT