நாமக்கல்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் இளைஞா் கைது

16th Oct 2021 11:09 PM

ADVERTISEMENT

மோகனூரில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (21). இவா் மோகனுாரில் உள்ள உறவினா் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னா் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி மோகன்குமாா் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாா். சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோா் மருத்துவமனையில் சோ்த்தனா். அப்போது, சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில் மோகன்குமாரை பற்றிய விவரங்களை தெரிவித்தாா்.

இது தொடா்பான தகவல் வருவாய்த் துறையினருக்கும், மாவட்ட குழந்தை நல அலுவலா் கவிதாவுக்கும் தெரியவந்தது. மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன் பேரில் மோகன்குமாரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT