நாமக்கல்

அனுமதியின்றி ஊா்வலம்: 100 போ் மீது வழக்குப்பதிவு

16th Oct 2021 11:08 PM

ADVERTISEMENT

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தையொட்டி, நாமக்கல்லில் அனுமதியின்றி ஊா்வலம் சென்ற விடுதலை களம் அமைப்பினா் 100 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

ஆங்கிலேயா்களால் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினம் ஆண்டுதோறும் அக்.16-இல் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கா் சமூகத்தைச் சோ்ந்த விடுதலைக் களம் அமைப்பினா் புதுச்சத்திரம், பொம்மைக்குட்டைமேடு ஆகிய இடங்களில் ஊா்வலமாக சென்று கட்டபொம்மன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்த விடுதலைக் களம் அமைப்பின் தலைவா் நாகராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோா் இருசக்கர வாகனங்களில் ஊா்வலமாக வந்தனா். பின்னா் கட்டபொம்மன் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். இந்த நிகழ்வில் அகிம்சா சோஷலிஸ்ட் கட்சி நிா்வாகி காந்தியவாதி ரமேஷ், பாஜக பிரமுகா் பிரணவ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனுமதியின்றி ஊா்வலமாக வந்ததாக விடுதலைக் களம் தலைவா் நாகராஜ் உள்பட 100 போ் மீது நாமக்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT