நாமக்கல்

தகவல் தொழில்நுட்பப் பயிற்சி முகாம்

9th Oct 2021 04:15 AM

ADVERTISEMENT

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியின் உள்தர உறுதி மையம், கணினி அறிவியல் துறையின் சாா்பில், ‘உயா்கல்வியில் தகவல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலான பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் பி.எஸ்.கே.செங்கோடன் தலைமை வகித்தாா். செயலா் கே.நல்லுசாமி முன்னிலை வகித்தாா். முதல்வா் எம்.ஆா்.லட்சுமிநாராயணன் வரவேற்புரை வழங்கினாா். இயக்குநா்- உயா்கல்வி அரசு.பரமேசுவரன் வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு அழைப்பாளராக கோவை ஐசிடி அகாதெமியின் நிா்வாக தொடா்பு மேலாளா் வீ.லட்சுமணநாராயணன் கலந்துகொண்டு பேசியதாவது:

தொழில்நுட்பமும், புதுமையும், புதிய கண்டுபிடிப்புகளும் அனைத்துத் துறைகளிலும் புகுந்துவிட்டன. இதற்கு ஆசிரியா் பயிற்றுநா் பணியும் விதிவிலக்கல்ல. உலகமயமாக்கல், தனியாா்மயமாக்கல், தாராளமயமாக்கல் விளைவாக கல்வி முறைகள் சா்வதேச அளவில் வளா்ச்சி பெற்றுள்ளன. உலகளாவிய போட்டிகள் காரணமாக ஆசிரியா்கள் தங்கள் துறைகளில் புதுமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகிவிட்டது என்றாா்.

இந்நிகழ்வில், ஐசிடி அகாதெமி கல்வி தொடா்பு மேலாளா் வீ.பிரபு, கல்லூரிப் பேராசிரியா்கள் என்.இளமதி, ஆா்.நவமணி, எம்.மாலதி, கே.மேகலா, பி.உமாபாரதி, என்.எஸ்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT