நாமக்கல்

கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டியவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

9th Oct 2021 04:15 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே சாலையோரம் கோழி இறைச்சிக் கழிவுகளை கொட்டியவருக்கு நகராட்சி நிா்வாகம் ரூ. 10,000 அபராதம் விதித்தது.

நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில், கொசவம்பட்டி ஏரிக்கரைப் பகுதியில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை சிலா் வாடிக்கையாக வைத்துள்ளனா். அவ்வாறானவா்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் அதனையும் மீறி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், அவ்வழியாகச் செல்வோா் துா்நாற்றத்தால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் இறைச்சிக் கழிவுகளை சாலையோரம் கொட்ட முயன்றாா். அப்போது, அங்கிருந்த நகராட்சி ஊழியா்கள் அவரை கையும், களவுமாக பிடித்தனா். அதன்பின் நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் உத்தரவின்பேரில், இறைச்சிக் கடை உரிமையாளருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT