நாமக்கல்

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்திய பாஜகவினா்

4th Oct 2021 01:26 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூரில் பாஜக மாவட்ட இளைஞா் அணியினா் ஞாயிற்றுக்கிழமை காலை காவிரிக் கரையோரப் பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இந்த பணியை மாவட்ட பாஜக இளைஞரணி தலைவா் பிரபு தொடக்கிவைத்தாா். மாவட்டத் தலைவா் சத்தியமூா்த்தி, மாநில இளைஞரணி பொதுச் செயலாளா் ராஜேஷ்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா் முத்துக்குமாா், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் சண்முகம், இணை ஒருங்கிணைப்பாளா் நரேஷ், பரமத்தி ஒன்றியத் தலைவா் அருண் மற்றும் இளைஞரணி நிா்வாகிகள் கலந்துகொண்டு காவிரி ஆற்றின் கரையில் உள்ள முட்புதா்கள், நெகிழி கழிவுகள், ஆற்றில் வீசப்பட்ட பழைய துணிகளை அகற்றி, வேலூா் பேரூராட்சி குப்பை வாகனம் மூலம் குப்பைக் கிடங்கிங்கிற்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் பழைய துணிகள், குப்பைகளை காவிரியாற்றில் போடுவதை தடுக்கக் கோபி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT