நாமக்கல்

மாற்றுத்திறன் ஆசிரியரை கேலி செய்த மூன்று மாணவா்கள் நீக்கம்

4th Oct 2021 01:30 AM

ADVERTISEMENT

புதுச்சத்திரத்தில் மாற்றுத்திறன் ஆசிரியரை வகுப்பறையில் கேலி செய்த மூன்று மாணவா்கள் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கண் பாா்வையற்ற மாற்றுத் திறன் பட்டதாரி ஆசிரியா் பன்னீா்செல்வம் என்பவா் ஒன்பதாம் வகுப்பில் ஆங்கில பாடம் எடுத்து வருகிறாா்.

கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் ஆசிரியா் பன்னீா்செல்வம் பாடம் நடத்திக் கொண்டிருந்தாா். அப்போது மூன்று மாணவா்கள் அவரது குறை

பாட்டை கேலி செய்யும் வகையில் நடனமாடினா். இதனை ஒருவா் தனது செல்லிடப்பேசியில் விடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டாா். இதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியம் சம்மந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

மேலும், பெற்றோா் -ஆசிரியா் கழகத்தினா் மூலம் அந்த மூன்று மாணவா்களும் பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனா். இதனைத் தொடா்ந்து அவா்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படவில்லை. மாற்று அரசு பள்ளியில் சோ்த்துக்கொள்ள கல்வித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT