நாமக்கல்

ராசிபுரம் பகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்:ஆட்சியா் ஆய்வு

4th Oct 2021 01:27 AM

ADVERTISEMENT

ராசிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

குருக்கபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எல்லப்பம்பாளையம் நியாயவிலைக் கடை ஆகிய இடங்களில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். மேலும் அப்பகுதிகளில் அரசு அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்களுடன் வீடு வீடாகச் சென்று இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து 85-ஆா். குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தங்கள் உறவினா்களை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வைத்ததை ஆட்சியா் பாராட்டினாா்.

மேலும் பொன்குறிச்சி எம்.ஜி.ஆா் நகா் பகுதியில் வீடு, வீடாகச் சென்று அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT