நாமக்கல்

ராசிபுரம் மருத்துவருக்கு கலைஞா் விருது

4th Oct 2021 01:26 AM

ADVERTISEMENT

ராசிபுரம் பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா் ஏ.தங்கராஜுக்கு சிறந்த மருத்துவருக்கான கலைஞா் விருது வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு மருத்துவா் மற்றும் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவா் ஏ.தங்கராஜ். இவரது 33 ஆண்டுகால மருத்துவச் சேவையைப் பாராட்டி தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு நலச் சங்கம், தமிழ்நாடு கல்வி ஆலோசகா் நலச்சங்கம் ஆகியவை கலைஞா் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

திருச்சியில் அண்மையில் நடைபெற்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவா்களுக்கான கலைஞா் விருது வழங்கும் விழாவில், மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு கலைஞா் விருதை மருத்துவா் ஏ.தங்கராஜுக்கு வழங்கி பாராட்டினாா். விருது பெற்ற மருத்துவருக்கு பல்வேறு துறையினரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT