நாமக்கல்

வீட்டுமனை பட்டா கோரி மனு

29th Nov 2021 11:55 PM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்டம், கருவேலம்பட்டி கிராம மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அக்கிராம மக்கள், மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினியிடம் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட கருவேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த எங்களுக்கு போதிய வீடு வசதியின்றி, குடிசை வீடிகளில் வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

இதேபோல, காரிமங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட பூனாத்தனஅள்ளி தலித் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், தங்களுக்கு போதிய இடமின்றி 40 ஆண்டுகளுக்கு முன் அரசு வழங்கிய தொகுப்பு வீடுகளில் வசித்து வருகிறோம். இரண்டு அல்லது மூன்று குடும்பங்களாக இத் தொகுப்பு வீடுகளில் வசித்து வரும் தங்களுக்கு, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT