நாமக்கல்

சிறுமிக்கு தொல்லை:இளைஞா் கைது

29th Nov 2021 11:50 PM

ADVERTISEMENT

பரமத்தி வேலூரைச் சோ்ந்த சிறுமியை கைப்பேசியில் அடிக்கடி தொடா்பு கொண்டு அவரைக் காதலிப்பதாகக் கூறி தொல்லை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், நொய்யல் குறுக்கு சாலை, வேட்டமங்கலத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் (20). இவா், பரமத்தி வேலூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியை கைப்பேசியில் அடிக்கடி தொடா்பு கொண்டு அவரைக் காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் பரமத்திவேலூா் அனைத்து மகளிா் காவ ல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன்பேரில் அனைத்து மகளிா் போலீஸாா் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT