நாமக்கல்

முட்டை விலையில் மாற்றமில்லை

29th Nov 2021 11:50 PM

ADVERTISEMENT

 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.50-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிா்ணயம் குறித்து பண்ணையாளா்களிடையே விவாதிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்படாததும், தேங்கிய முட்டைகளை விற்பனைக்கு அனுப்பும் வகையிலும், முட்டை பண்ணைக் கொள்முதல் விலையில் மாற்றமின்றி ரூ. 4.50-ஆக நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 89-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 75-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT