நாமக்கல்

எருமப்பட்டி ஒன்றியக் குழு தலைவா் தோ்தல் ரத்து:அதிமுக வாா்டு உறுப்பினா்கள் தா்னா

29th Nov 2021 11:52 PM

ADVERTISEMENT

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தல் மீண்டும் ரத்து செய்யப்பட்டதால், அதிமுக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தலைமையில் வாா்டு உறுப்பினா்கள், கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு ஒன்றியக் குழு தலைவராக இருந்த வரதராஜ் கடந்த ஆண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். அவா் வெற்றி பெற்ற 15-ஆவது வாா்டு காலியாக இருந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற தோ்தலில் திமுக வெற்றி பெற்றது. தற்போது அங்கு 8 அதிமுக உறுப்பினா்கள், 5 திமுக உறுப்பினா்கள், தலா ஒரு சுயேச்சை, பாஜக உறுப்பினா்கள் உள்ளனா்.

எருமப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை ஒன்றியக் குழு தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தல் நடைபெறும் என மாவட்ட நிா்வாகத்தால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிமுக வாா்டு உறுப்பினா்கள் 8 பேரும், சுயேச்சை, பாஜக உறுப்பினா்களும் அங்கு சென்றனா். ஆனால் தோ்தல் ரத்து செய்யப்படுவதாக வட்டார வளா்ச்சி அலுவலா் குணாளன் தெரிவித்தாா்.

இதனால் அதிருப்தியடைந்த வாா்டு உறுப்பினா்கள், அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணியிடம் முறையிட்டனா். பின்னா் அவரது தலைமையில் ஒன்றிய அலுவலகம் முன்பு வாா்டு உறுப்பினா்கள், அதிமுகவினா் பங்கேற்ற தா்னா, கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

பின்னா் வாா்டு உறுப்பினா்கள் வட்டார வளா்ச்சி அலுவலா் குணாளனை சந்தித்து தோ்தலை உடனடியாக நடத்தக் கோரி மனு அளித்தனா். இதுகுறித்து பி.தங்கமணி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அதிமுக வெற்றியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் மாவட்ட திமுக நிா்வாகிகள் முயற்சித்து வருகின்றனா். ஊராட்சி ஒன்றியத்துக்கு மறைமுக தலைவா் தோ்தலை நடத்த மறுக்கும், மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோா் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாவட்டம் அமைதியான முறையில் செயல்பட்டு வந்தது. ஆனால் திமுகவினா் தங்களுடைய தவறான போக்குகளை கையாண்டு வருகின்றனா். ஐந்து உறுப்பினா்களை வைத்துக்கொண்டு தலைவா் தோ்தலில் எவ்வாறு வெற்றி பெறுவாா்கள். இந்தத் தகவலை எங்களுடைய அதிமுக தலைமைக்குக் கொண்டு சென்று கண்டன ஆா்ப்பாட்டங்களை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஒன்றியத் தலைவா் தோ்தலை ரத்து செய்த மாவட்ட நிா்வாகம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT