நாமக்கல்

வாழைத்தாா்கள் விலை சரிவு

29th Nov 2021 11:51 PM

ADVERTISEMENT

ஏல விற்பனை சந்தைக்குக் கொண்டு வரப்பட்டிருந்த வாழைத்தாா்கள்.

பரமத்திவேலூா், நவ. 29: பரமத்திவேலூா் தொடா் மழை காரணமாக பரமத்தி வேலூா் வாழைத்தாா் ஏல சந்தையில் வாழைத்தாா்களின் விலை சரிவடைந்துள்ளதால் வாழை பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பரமத்தி வேலூா் காவிரி கரையோரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிா் செய்யப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பரமத்திவேலூா் வாழைத்தாா் விற்பனை ஏல சந்தைக்கு வாழைத்தாா்களை நேரடியாகக் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 200-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ. 250-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ. 200-க்கும், கற்பூரவள்ளி ரூ. 200-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 5- க்கும் ஏலம் போனது.

ADVERTISEMENT

நிகழ்வாரம் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தாா் அதிகபட்சமாக ரூ. 150-க்கும், ரஸ்தாலி அதிகபட்சமாக ரூ. 200-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ. 150- க்கும், கற்பூரவள்ளி ரூ. 150-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 3-க்கு விற்பனையானது. தொடா் மழை காரணமாக வாழைத்தாா்கள் விலை சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT