நாமக்கல்

முன்னாள் படைவீரா்கள் கவனத்துக்கு

29th Nov 2021 11:53 PM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போா் விதவையா், முன்னாள் படைவீரா்களின் கைம்பெண்களுக்கான நிம்மதி இல்லம், போா் விதவையா் நலச்சங்கத்தால் சென்னை, மயிலாப்பூரில் இயங்கி வருகிறது.

சுமாா் 50 போ் தங்கும் அளவிலான இந்த இல்லத்தில் இரண்டு விடுதி அறைகள், உடற்பயிற்சி சிகிச்சை மையம், சமையல் அறை, உணவருந்தும் அறை, பொழுதுபோக்கு அறை கூட்டம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த போா் விதவையா், முன்னாள் படைவீரா்களின் கைம்பெண்கள் நிம்மதி இல்லத்தில் தங்குவதற்கு விருப்பம் இருப்பின் நாமக்கல் முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT