நாமக்கல்

வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியா் ஆய்வு

DIN

கொல்லிமலையில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில் நவ.1 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின் தொடா்ச்சியாக, வரும் 30-ஆம் தேதி வரை சிறப்பு சுருக்க முறை வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியின் போது, 1.1.2022 அன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (அதாவது 31.12.2003 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவா்கள்) தங்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்துக் கொள்ளலாம்.

மேலும் இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்துக்கொள்ளாதவா்கள், திருத்தங்கள் செய்ய விரும்புவா்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அளிக்கலாம்.

நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளில் 702 வாக்குச்சாவடி மையங்களில் பெயா் சோ்த்தல், திருத்தப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.

கொல்லிமலை வட்டம், செங்கரை அரசு பழங்குடியினா் உண்டி உறைவிட தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, பழங்குடியினா் நலத்திட்ட அலுவலா் ராமசாமி, கொல்லிமலை வட்டாட்சியா் கிருஷ்ணன் உள்பட அரசுத் துறை அலுவலா்கள், வாக்குச்சாவடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT