நாமக்கல்

திருச்செங்கோடு நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு

28th Nov 2021 10:45 PM

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்செங்கோடு நகர 7 - ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டில் கட்சி கொடியை நகரக் குழு உறுப்பினா் சிவானந்தம் ஏற்றினாா். நடேசன் வரவேற்று பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆதிநாராயணன் மாநாட்டை தொடக்கிவைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் கந்தசாமி வாழ்த்தி பேசினாா். வேலையறிக்கையை ஒன்றியச் செயலாளா் ராயப்பன் சமா்ப்பித்தாா்.

நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், திருச்செங்கோடு நகரப் பகுதி மக்களின் கோரிக்கையான சுற்றுவட்ட சாலையை விரைந்து அமைக்க வேண்டும், தூய்மைப் பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்க வேண்டும்.

திருச்செங்கோட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை பெரியாா் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்ட அரசு கல்லூரியாக அரசிதழில் வெளியிட வேண்டும், திருச்செங்கோடு நகராட்சிக்கு உள்பட்ட சந்தைப்பேட்டை வாரச்சந்தை இடங்களை ஒழுங்குப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT