நாமக்கல்

கொல்லிமலை - விளாரம் சாலையில் வெடிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

28th Nov 2021 10:49 PM

ADVERTISEMENT

கொல்லிமலை - விளாரம் சாலையில் ஆங்காங்கே வெடிப்பு காணப்படுவதால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா் சிரமத்திற்குள்ளாகின்றனா்.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கொல்லிமலை. கடந்த சில மாதங்களாக மலைப்பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆகாய கங்கை, நம் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும், மலைக்குச் செல்லும் கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே சிறு அருவிகள் தோன்றி தண்ணீா் சாலைகளில் ஆறாக ஓடுகிறது.

இந்த நிலையில், கொல்லிமலை, தேவனூா்நாடு ஊராட்சிக்கு உள்பட்ட அரிப்பலாபட்டி கிராமத்தில் இருந்து விளாரம் செல்லும் வழியில் உள்ள சாலையில் ஆங்காங்கே வெடிப்பு காணப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோா் அவற்றில் சிக்கி கீழே விழும் அபாயம் உள்ளது.

இது குறித்து அங்குள்ள மலைவாழ் மக்கள் வட்டாட்சியா் கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சாலையை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT