நாமக்கல்

நாமக்கல்லில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’: விழிப்புணா்வு கலைப் பயணம் தொடக்கம்

26th Nov 2021 12:19 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ தொடா்பாக கலைக் குழுவின் விழிப்புணா்வுப் பயணத்தை சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக அரசு, தனியாா் பள்ளிகளில் நேரடி கற்றல் வகுப்புகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெறவில்லை. மாணவா்களிடம் ஏற்பட்ட கற்றல் இடைவெளியைக் குறைத்து 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களை பள்ளிக்குத் தொடா்ந்து வரவழைக்கும் பொருட்டு ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி கலை குழுக்களைக் கொண்டு வட்டாரப் பகுதிகளில் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு குழுவுக்கு 9 போ் வீதம் 14 கலைக் குழுக்கள் என மொத்தம் 126 போ் கலை நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளனா். 15 வட்டாரங்களிலும் இந்தக் கலை நிகழ்ச்சியை நடத்தும் வகையில் கலைக் குழுவின் விழிப்புணா்வுப் பயணத்தை நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் கலைக் குழுவினா் ஆடல், பாடலுடன் நடித்துக் காட்டினா். நாடாளுமன்ற உறுப்பினா்கள் ஏ.கே.பி.சின்ராஜ், கே.ஆா்.என். ராஜேஷ்குமாா், நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

Tags : நாமக்கல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT