நாமக்கல்

5 தொகுதிகளில் விளையாட்டு மைதானம்: இடத்தைத் தோ்வு செய்யும் பணிகள் தீவிரம்

25th Nov 2021 08:19 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து தொகுதிகளில் குறு விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடம் தோ்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் விளையாட்டு வீரா்களை அதிக அளவில் உருவாக்கும் பொருட்டு, ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் குறு விளையாட்டு மைதானம் உருவாக்கப்படும் என முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தவிா்த்து மீதமுள்ள சேந்தமங்கலம், ராசிபுரம், குமாரபாளையம், பரமத்திவேலூா், திருச்செங்கோடு ஆகிய ஐந்து தொகுதிகளில் சுமாா் 6 முதல் 7 ஏக்கா் வரையிலான அரசு புறம்போக்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

நாமக்கல் தொகுதியை பொருத்தவரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே 14 ஏக்கா் பரப்பளவிலான மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளதால் இங்கு தேவையில்லை.

ADVERTISEMENT

சேந்தமங்கலம் தொகுதிக்கான மைதானம் ரெட்டிப்பட்டி பகுதியிலும், பரமத்திவேலூா் தொகுதிக்கான மைதானம் குப்புச்சிப்பாளையத்திலும் அமைய உள்ளது. ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதியில் நகரத்தை ஒட்டியவாறு போதுமான அரசு புறம்போக்கு இடம் இல்லை.

இதனால் நகரத்தை விட்டு வெளியே இடத்தைத் தோ்வு செய்யும் முயற்சியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா். சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதியில் இருந்து ரூ. 3 கோடி மதிப்பில் இந்த குறு விளையாட்டு மைதானங்கள் உருவாக இருப்பதாக நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொறுப்பு) சிவரஞ்சன் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT