நாமக்கல்

ரூ. 4 லட்சம் நிலுவை ஊதியம் வழங்கக் கோரி தா்னா

25th Nov 2021 08:16 AM

ADVERTISEMENT

நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளா்கள், பாதுகாவலா்களுக்கு நிலுவையில் உள்ள ரூ. 4 லட்சத்தை வழங்க வேண்டும் எனக் கோரி தா்னா போராட்டம் நடைபெற்றது.

புனேவை சோ்ந்த தனியாா் நிறுவனம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளா்களை நியமித்துள்ளது. அவா்கள் தூய்மைப் பணிகள், மருத்துவமனை வளாக பாதுகாப்பு, செவிலியா், மருத்துவா்களுக்கு உதவியாளா் போன்ற பணிகளை செய்து வருகின்றனா்.

அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 102 போ் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் 82 பேருக்கு கூடுதல் நேரம் பணியாற்றியதற்கு வழங்க வேண்டிய ஊதியம், நிலுவை ஊதியம் என மொத்தம் ரூ. 4 லட்சத்தை வழங்கக் கோரி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

கரோனா காலத்தில் 13 மணி நேரம் வரை பணியாற்றினோம். அந்த நேரத்துக்கான ஊதியத்தை வழங்கக் கோரி ஏற்கெனவே இரு முறை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டோம். தனியாா் நிறுவனத்தினா் பேச்சுவாா்த்தை நடத்தினா். விரைவில் நிலுவைத் தொகையை வழங்குவதாகக் கூறிய நிலையில், இதுவரை வழங்கப்படவில்லை. அதனால்தான் மீண்டும் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதற்கிடையே மருத்துவக் கல்லுாரி முதன்மையா் சாந்தா அருள்மொழியிடம் தூய்மைப் பணியாளா்கள் முறையிட்டனா். ஆனால், மருத்துவமனை நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என கூறிவிட்டது. இதனால் மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT