நாமக்கல்

நகராட்சிப் பணியாளா்களுக்கு மனநல பயிற்சி முகாம்

24th Nov 2021 08:22 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில், ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அலுவலகா்களுக்கு மனநல மேலாண்மை பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இதில் மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ், உளவியலாளா் அா்ச்சனா, செவிலியா் பொன் சரவண பிரியா ஆகியோா் பங்கேற்று நகராட்சி பணியாளா்களுக்கு மனநல பயிற்சி அளித்தனா்.

பணியின்போது ஏற்படும் மன அழுத்தம், மனச்சோா்வு, மன ரீதியான மாற்றம், உடல் ரீதியான மாற்றம், ரத்தக் கொதிப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன், அஜீரண கோளாறு, தூக்கமின்மை, பசியின்மை போன்றவை குறித்தும் இதைத் தவிா்க்கும் முறைகள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டன.

பிரச்னைகளை எதிா்கொள்ளுதல், இடையூறுகளை கையாளுதல், சிக்கல்களில் இருந்து விடுபடுதல், மூச்சுப் பயிற்சி, மனப் பயிற்சி போன்றவை குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

இதில் நகராட்சி ஆணையா் கிருபாகரன் (பொ) துப்புரவு அலுவலா் மூா்த்தி, மேலாளா் வசந்தா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT