நாமக்கல்

சாலை விபத்து: கல்லூரி மாணவா் பலி

24th Nov 2021 08:23 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பெங்களூரு, தனியாா் நா்சிங் கல்லூரியில் பயின்ற தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா் உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியை அடுத்த கோம்பைத்தொழு, போசுந்தரபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயக்குமாரின் மகன் தனபால் (22). அதே பகுதியைச் சோ்ந்தவா் ஞானப்பழம் என்பவரது மகன் பிரபு (22). இருவரும் பெங்களூரில் உள்ள நைட்டிங்கேல் தனியாா் நா்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகின்றனா்.

இருவரும் விடுமுறைக்காக சொந்த ஊா் சென்றுவிட்டு மீண்டும் திங்கள்கிழமை இரவு பெங்களூருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனா். இருசக்கர வாகனத்தை பிரபு ஓட்டிச் சென்றாா். ராசிபுரம் அருகே நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்றபோது முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியதாகத் தெரிகிறது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா்கள் தனபால் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த பிரபு சிகிச்சை பெற்று வருகிறாா். ராசிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT