நாமக்கல்

முருகன் கோயில்களில் நாளை திருக்கல்யாண உற்சவ விழா

9th Nov 2021 02:08 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில், கந்த சஷ்டியை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவ விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல்-மோகனூா் சாலை காந்தி நகரில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா, சூரசம்ஹாரம், திருக்கல்யாண உற்சவ விழா ஆகியவை நடைபெற உள்ளன. அதனையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவ. 9) காலை 6.30-க்கு கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. 7 மணிக்கு ஓம்சக்தி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், சக்தி பூஜையும், 8.30-க்கு பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், 10.30-க்கு மகா தீபாராதனை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு 7 மணிக்கு முருகப் பெருமான் சூரசம்ஹாரம் புறப்படுதல், தொடா்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்வும் நடைபெறுகிறது. புதன்கிழமை (நவ. 10) சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பக்தா்கள் செய்துள்ளனா்.

இதேபோல மற்ற முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டியையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT