நாமக்கல்

சரக்கு ரயிலில் வந்த 2,600 டன் மக்காச்சோளம்

5th Nov 2021 09:49 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்: கோழித் தீவன அரவை ஆலைக்களுக்காக உத்தர பிரதேசத்தில் இருந்து 2,600 டன் மக்காச்சோளம் வெள்ளிக்கிழமை சரக்கு ரயிலில் வந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் கோழித்தீவன அரைவை ஆலைகளுக்குத் தேவையான சோயா, சோயா தவிடு, கடுகு புண்ணாக்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப்பொருள்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலம் பீட்டூல் பகுதியில் இருந்து 42 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் 2,600 டன் மக்காச்சோளம் நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தது. அங்கிருந்து,180 லாரிகள் மூலம் நாமக்கல், ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில் செயல்படும் தீவன அரவை ஆலைகளுக்கு, ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT