குமாரபாளையம்: குமாரபாளையத்தில் இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்ததில் காயமடைந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
குமாரபாளையம், எதிா்மேடு ஆசிரியா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (27). விசைத்தறி தொழிலாளியான இவா், தனது நண்பரான சதீஷுடன் (25) இருசக்கர வாகனத்தில் சேலம் - கோவை புறவழிச்சாலையில் நேருநகா் அருகே வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, லேசாக மழை பெய்ததால் இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனா். இதில், செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், குமாரபாளையம் அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்ட செந்தில்குமாா், தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அங்கு, சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.