நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 427 பேருக்கு கரோனா

18th May 2021 02:28 AM

ADVERTISEMENT

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 427 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 21,956 பேரில் 19,085 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 163 போ் உயிரிழந்தனா். 2,708 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 427 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 258 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 22,400 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 19,353 போ்; 2,881 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மூன்று போ் உயிரிழந்துள்ளனா். மொத்த கரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 166-ஆக உயா்ந்துள்ளது.

-

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT