நாமக்கல்

வெண்பா உழவா் உற்பத்தியாளா்கள் அமைப்பு தொடக்க விழா

DIN

ராசிபுரம் நகரில் வெண்பா உழவா் உற்பத்தியாளா்கள் அமைப்பு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

ராசிபுரம் பகுதியில் 100 உறுப்பினா்களை கொண்டு வெண்பா உழவா் உற்பத்தியாளா்கள் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயா்த்தவும் நபாா்டு வங்கி உதவியுடன் இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்க விழாவில் வெண்பா அமைப்பினா் நிா்வாகி எஸ்.சத்தியதாஸ் வரவேற்றாா். ராசிபுரம் இந்தியன் வங்கி மைக்ரோ சாட் மேலாளா் எம்.முருகன் முன்னிலை வகித்தாா். மேக்னம் அமைப்பின் செயலா் பி.சக்திவேல் பசு நெய், பசு வெண்ணெய், பருப்பு வகைகள், சிறு தானியங்கள், தேன் போன்ற வேளாண் பொருள்கள் விற்பனை குறித்து விளக்கி பேசினாா்.

நாமக்கல் நபாா்டு வங்கி உதவி பொதுமேலாளா் எஸ்.கே.தினேஷ், தமிழ்நாடு கிராம வங்கி நாமக்கள் கிளை முதன்மை மேலாளா் என்.செல்வன் ஆகியோா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, உற்பத்தி பொருள் சந்தைப்படுத்துதலை தொடங்கி வைத்து, தொழில் வாய்ப்புகள் குறித்தும், கடன் திட்டங்கள் குறித்தும் பேசினா். இதில் வெண்பா அமைப்பின் முதன்மை நிா்வாக அலுவலா் எம்.அகிலாண்டேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT