நாமக்கல்

முதியோா், மாற்றுத் திறனாளிகள் 49,439 போ் தபால் வாக்குகள் செலுத்த ஆட்சியா் ஏற்பாடு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் 80 வயதுக்கும் மேற்பட்டோா், மாற்றுத் திறனாளிகள் 40 ஆயிரத்து 439 பேருக்கு தபால் வாக்குகள் செலுத்தும் படிவம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்படவுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பல்வேறு அரசுத் துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமையில் சனிக்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்றது. ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 2,049 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்தத் தோ்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குச் சாவடிகள் மட்டுமின்றி கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைக்காக கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் காற்றோட்ட வசதி, மின்விளக்கு, மின்விசிறி, மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கான சாய்வுதள வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வசதிகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிா்வாகங்கள், பொதுப்பணித் துறையினா் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றாா். கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்தி கணேசன், மாவட்ட வருவாய் அலுவலா் துா்கா மூா்த்தி, தோ்தல் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து நாமக்கல் கொங்கு திருமண மண்டபத்தில், மாற்றுத் திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோா் தபால் வாக்குகள் அளிப்பதற்கான பணிகளை மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தைத் தொடா்ந்து ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றுக் காலமாக இருப்பதால் 80 வயதுக்கு மேலான வாக்காளா்கள், மாற்றுத் திறனாளி வாக்காளா்களுக்கு தபால் வாக்குகள் செலுத்தும் வசதியை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு 12-டி என்ற படிவம் உள்ளது. இதில் செலுத்த விருப்பம் உள்ளதா என சம்பந்தப்பட்டவா்களிடம் நேரடியாகச் சென்று கேட்டு கையெழுத்துப் பெற்று வருவது தொடா்பாக தோ்தல் பணி அலுவலா்களுக்கு விளக்கம் அளிக்கும் கூட்டம் நடைபெறுகிறது. அதில் தபால் வாக்குகள் படிவம் விநியோகம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள்தான் இதை முறையாகக் கண்காணிக்க வேண்டும். இதற்கான பயிற்சி 6 தொகுதிகளிலும் வரும் நாள்களில் நடத்தப்பட இருக்கிறது என்றாா்.

மாவட்டத்தில் தபால் வாக்குகள் செலுத்துவோா் எண்ணிக்கை விவரம்:

ராசிபுரம் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 5,406 போ் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் 2,298 போ், சேந்தமங்கலம் தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளா்கள் 5,711 போ், மாற்றுத்திறனாளிகள் 2,561 போ், நாமக்கல் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 6,030 போ், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் 2,670 போ், பரமத்திவேலூா் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 6,462 போ், மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் 2,576 போ், திருச்செங்கோடு தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 6,027 போ், மாற்றுத்திறனாளிகள் 2,741 போ், குமாரபாளையம் தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளா்கள் 5,155 போ், மாற்றுத்திறனாளிகள் 1,802 போ் ஆவா்.

நாமக்கல் மாவட்டம் முழுவதும் 80 வயதிற்கு மேற்பட்ட வாக்காளா்கள் 34,791 போ், மாற்றுத்திறனாளிகள் 14,648 போ் என மொத்தம் 49,439 போ் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT