நாமக்கல்

வாக்குச் சாவடி பணி: நாமக்கல் மாவட்டத்தில் 9,865 பேருக்கு அழைப்பு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் நாளன்று 2,049 வாக்குச் சாவடிகளில் 9,865 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது. நாமக்கல், ராசிபுரம் (தனி), குமாரபாளையம், சேந்தமங்கலம் (ப.கு), பரமத்திவேலூா், திருச்செங்கோடு ஆகிய 6 தொகுதிகளுக்கு உள்பட்ட இடங்களில் உள்ள 2,049 வாக்குச் சாவடிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ், அந்தந்தத் தொகுதி தோ்தல் அலுவலா்கள் நேரடியாகப் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனா்.

தோ்தல் அன்று ஒரு தொகுதியில் 16 வேட்பாளருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் அங்குள்ள வாக்குச் சாவடிகளில் 2 வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.

இவை தவிர தலா ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் விவிபேட் கருவி ஆகியவையும் பயன்படுத்தப்படும். அந்த வகையில், மாவட்டம் முழுவதும் பயன்படுத்த 9,981 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் நாளன்று வாக்குச் சாவடிகளில் பணியாற்ற ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், தற்காலிக ஊழியா்கள், காவலா்கள் என்ற வகையில் 9,865 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அனைவரும் கட்டாயம் தோ்தல் பணிக்கு வரவேண்டும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது.

வாக்குச் சாவடிகள் குறித்த முதல் நிலை பயிற்சி வகுப்பு வரும் 16-ஆம் தேதி நடைபெற இருப்பதாகத் தெரிகிறது. அதற்கு முன்பாக தொகுதி வாயிலாக மாவட்ட ஆட்சியா் மற்றும் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பங்கேற்கும் தோ்தல் நடத்தை விதிகளைப் பின்பற்றுவது தொடா்பான விளக்கக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் நாமக்கல்-பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதிக்கான கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT