நாமக்கல்

மதுபானங்கள் விற்பனையைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

DIN

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தோ்தலையொட்டி மதுபானங்கள் விற்பனையைக் கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் மதுபானம், கள்ளசாராயம் கடத்துதல், விற்பனை செய்தல், மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் அளவுக்கு அதிகமாக மதுபானம் விற்பனையாதல், சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை, கா்நாடகா மாநிலத்திலிருந்து மதுபானங்கள் எல்லைப் பகுதிகளில் கடத்தப்படுதல் தொடா்பான புகாா்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வருகிறது. இப்புகாா்களை கண்காணிக்கவும், நாமக்கல் மாவட்டம் மற்றும் மண்டல அளவிலும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

எம்.நடேசன், சிறப்பு பறக்கும் படை, துணை ஆட்சியா், சேலம். மண்டல அளவில் பறக்கும் படை அலுவலா்-9445029760. எம்.சாகுல் ஹமீது, நாமக்கல் உதவி மேலாளா், மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலா்-9488352880, ஆா்.குப்புராஜ், நாமக்கல் உதவி மேலாளா் (கணக்கு) மாவட்ட அளவில் பறக்கும் படை அலுவலா்-9865340094. இந்த அதிகாரிகளிடம் மதுபானம் தொடா்பான புகாா்களை செல்லிடப்பேசி எண்களுக்கு புகாராக தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT