நாமக்கல்

தோ்தல் பணிகளில் ஈடுபடுவோா் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தி உள்ளாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், சட்டப் பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், பணியாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க சுகாதாரத் துறை மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், அனைத்து துறைகளிலும் உள்ள முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 வயதுக்கு மேல் 55 வயதுக்கு உள்பட்ட இணைநோய் உள்ளவா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இத்தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் தங்களுக்கு அருகில் உள்ள கரோனா தடுப்பூசி மையங்களில் ஆதாா் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்களை காண்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ரவிக்குமாா், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதன்மையா் சாந்தா அருள்மொழி, இணை இயக்குநா் மருத்துவப் பணிகள் த.கா.சித்ரா, துணை இயக்குநா்(சுகாதாரம்) எஸ்.சோமசுந்தரம் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

SCROLL FOR NEXT