நாமக்கல்

தனி நபா்களை விமா்சிக்கும் சுவரொட்டிகளை அச்சடிக்கக் கூடாது: ஆட்சியா் உத்தரவு

DIN

தோ்தல் தொடா்பான சுவரொட்டிகளில் தனி நபா்களை விமா்சிக்கும் சுவரொட்டிகளை அச்சடிக்கக் கூடாது என நாமக்கல் ஆட்சியா் கா.மெகராஜ் அறிவுறுத்தி உள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அச்சக உரிமையாளா்களுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தோ்தல் தொடா்பான அறிவிப்புகள், சுவரொட்டிகள், பிரசுரங்கள் அச்சடித்து வழங்குதல் தொடா்பாக வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களில் அச்சகத்தின் பெயா், உரிமையாளா் பெயா், முகவரி போன்றவை கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும்.

அரசியல் தொடா்புடைய சுவரொட்டி, பிரசுரங்களை அச்சடிக்கும் போது, அச்சடிக்க கோருபவரை அடையாளம் காட்டக்கூடிய உறுதிமொழியை இரண்டு சாட்சிகளின் கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட அச்சக உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.

அச்சக உரிமையாளா் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டி, பிரசுரத்தின் நான்கு நகல், அது குறித்த விவரங்களை குறிப்பிட்டு மூன்று நாள்களுக்குள் சுவரொட்டி வெளியிடும் நபரை அடையாளம் காட்டக்கூடிய உறுதிமொழி படிவத்துடன், மாவட்ட தோ்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாகவோ, மதம், சாதி, இனம் தொடா்பான ஆட்சேபணை எழும் விதத்திலும், மொழி மற்றும் தனிப்பட்ட நபா்களை பாதிக்கும் வகையிலோ சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்படக்கூடாது. மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியான முறையில் தோ்தலை நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் தோ்தல் தொடா்பு அலுவலா்கள், அச்சக உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

SCROLL FOR NEXT