நாமக்கல்

ரூ. 28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

DIN

நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 28 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் தொடக்க வேளாண் உற்பத்தியாளா்கள் விற்பனை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவா். அதன்படி செவ்வாய்க்கிழமை 1,300 மூட்டை பருத்தி வரத்து இருந்தது. ஏலத்தில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 6,529 முதல் ரூ. 7,777 வரையிலும், டிசிஹெச் ரகம் ரூ. 7,105 முதல் ரூ. 9,298 வரையிலும், கொட்டு பருத்தி ரூ. 2,899 முதல் ரூ. 5,090 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 28 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

திருப்பூா், ஈரோடு, கரூா், சேலம், கோவை மற்றும் ஆந்திர மாநில வியாபாரிகளும் பருத்தியை நேரடியாக பாா்வையிட்டு கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT