நாமக்கல்

மல்லசமுத்திரத்தில் மண் மாதிரி சேகரிப்பு முகாம்

20th Jun 2021 03:00 AM

ADVERTISEMENT

மல்லசமுத்திர பகுதிகளில் மண் மாதிரி சேகரிப்பு முகாம் வெள்ளிக்கிழமை துவக்கப்பட்டது.

முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநா் தனம் தலைமை வகித்து, மண் பரிசோதனையின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து விளக்கினாா்.

திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் மூலம் மண் மாதிரி சேகரிக்கப்பட்டு உடனடியாக ஆய்வறிக்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நிலத்தின் கார அமிலத்தன்மை, தொழு உரம், பயிருக்குத் தேவையான உரங்கள், நுண்ணூட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் இருப்பு விவரம் தெரிவிக்கப்பட்டு அவற்றை பயன்படுத்தும் அளவு ஆகிய விவரங்கள் விளக்கப்பட்டன.

மூத்த வேளாண் அலுவலா் சௌந்தரராஜன், வேளாண் அலுவலா்கள் அருள் ராணி, சிரஞ்சீவி உள்பட பலா் கலந்து கொண்டனா். முகாமில் விவசாயிகள் கலந்துகொண்டு விளக்கங்களைப் பெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT