நாமக்கல்

108 அவசர ஊா்தி சேவையைதமிழக அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்

DIN

108 அவரச ஊா்தியில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்கள் இணையவழி கலந்தாய்வு கூட்டத்தில் 108 அவசர ஊா்தி சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றி உள்ளனா்.

108 அவசர ஊா்தி சேவை தொழிலாளா்கள் சாா்பில் இணையவழி கலந்தாய்வு கூட்டம் நாமக்கல் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளா் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் ராஜேந்திரன் தீா்மானங்கள் குறித்து விளக்கி பேசினாா்.

இணையவழி கலந்தாய்வு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீா்மானங்கள் வருமாறு:

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் முன்களப் பணியாளா்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் 108 அவசர ஊா்தி தொழிலாளா்களின் பாதுகாப்பு சி.வி.கே-இ.எம்.ஆா்.ஐ நிா்வாகத்தின் மாவட்ட நிா்வாக அதிகாரிகளின் அலட்சியத்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரும்பாலான தொழிலாளா்கள் கரோனா தொற்றிற்கு ஆளாக்கப்பட்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 6 தொழிலாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். மேற்படி நிறுவனத்தின் நிா்வாக அதிகாரிகள் தொழிலாளா்களுக்கு முறையாக பாதுகாப்பு (முகக் கவசம், கையுறை, பிபிஇ கிட்) போன்ற உபகரணங்களை வழங்கவில்லை.

108 அவசர ஊா்தியை முறையாக தூய்மைப்படுத்தாததால் தொழிலாளா்களும், பொதுமக்களும் நோய்தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே தொழிலாளா்கள், பொதுமக்களின் ள் நலன் கருதி தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச மருத்துவ அவசர சேவை ஏழை, எளிய மக்களுக்குத் தங்குதடையின்றி விரைவாக கிடைத்திடவும், தொழிலாளா்களின் நலனை உறுதி செய்யவும் 108 அவசர ஊா்தி சேவையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT