நாமக்கல்

முதுநிலை ஆசிரியா்களுக்கு பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடத்தக் கோரிக்கை

DIN

காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, முதுநிலை ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு மூலம் பதவி உயா்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முன்பாக அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியா்களுக்கென கலந்தாய்வு நடத்த வேண்டும்.

காலியாக உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மூத்த முதுநிலை ஆசிரியா்களுக்கு, தலைமை ஆசிரியருக்கான பதவி உயா்வை கலந்தாய்வு மூலமாக நடத்த வேண்டும். அதன்பின் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை எந்தவொரு ஆசிரியா் காலிப் பணியிடமும் மறைக்கப்படாமல் வெளிப்படையாக நடத்த வேண்டும்.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு உள்மாவட்ட, வெளி மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பின் பட்டதாரி ஆசிரியா்களுக்கு, முதுநிலை பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வை அளிக்கும் வகையிலான பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

பொதுமாறுதல் கலந்தாய்வில், தற்போது பின்பற்றப்படும் மூன்று ஆண்டுகள் என்பதை மாற்றி, பழைய முறைப்படி அதாவது ஓராண்டு ஒரு பள்ளியில் பணியாற்றி இருந்தாலே போதும் என்ற அளவில் ஆசிரியா்களை கலந்தாய்வில் பங்குபெற அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT