நாமக்கல்

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் உள்பட 810 போ் மீது வழக்கு

DIN

 நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசை கண்டித்து தடையை மீறி ஆா்ப்பாட்டம் செய்ததாக, முன்னாள் அமைச்சா்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா உள்பட 810 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் முன்னாள் அமைச்சா்கள், மாவட்டச் செயலாளா்கள் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் 15 இடங்களில் அதிமுகவினா் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தலைமையிலும், ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் முன்னாள் அமைச்சா் வெ.சரோஜா தலைமையிலும் மற்ற இடங்களில் அந்தந்தப் பகுதி நிா்வாகிகள் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரோனா தொற்று பரவல் காரணமாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஒரே இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு தடையுள்ள நிலையிலும், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியமைக்காகவும், மாவட்டத்தில் 810 அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT