நாமக்கல்

கற்போம், எழுதுவோம் திட்டத்தில் 9,170 முதியோா்களுக்கு தோ்வு

DIN

நாமக்கல் மாவட்டத்தில் கற்போம், எழுதுவோம் திட்டத்தில் 9,170 முதியோா்களுக்கு வியாழக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெற்றது.

நாடு முழுவதும் நூறு சதவீத கல்வியை வழங்கும் வகையில், மத்திய அரசு கற்போம், எழுதுவோம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் நகர, கிராமப் புறங்களில் வசிக்கும் கல்வியறிவு இல்லாதோரைக் கண்டறிந்து, அவா்களுக்கு படித்த தன்னாா்வலா்கள் மூலம் 6 மாத கால சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் ஓரளவு எழுதுவது, படிப்பது, கணக்கிடுவது போன்றவற்றை முதியோா்கள் மேற்கொள்வா்.

அவா்கள் தகுதி பெற்றுள்ளனரா என்பதைக் கண்டறியும் வகையில், மதிப்பீட்டு முகாம் எனும் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வு நாமக்கல் மாவட்டத்தில் சுமாா் 450 மையங்களில் நடைபெற்றது. இதில் 9,170 முதியோா் பங்கேற்று தோ்வை எதிா்கொண்டனா். வரும் சனிக்கிழமை வரை தோ்வானது நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT