நாமக்கல்

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

DIN

 ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல்லில் உளள அம்மன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடுகளை மேற்கொண்டனா்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் அனைத்து செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண் பக்தா்கள் அதிகாலைகளில் அம்மன் கோயில்களில் வழிபாடு நடத்துவா். அதன்படி ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி, நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோயில், செல்லாண்டியம்மன் கோயில், வண்டிக்காரன் தெரு பகவதியம்மன் கோயில், சின்னமுதலைப்பட்டி அம்மச்சியம்மன் கோயில், கே.கே.வி., நகா், பாலாம்பிகை கோயில், செல்லப்பம்பட்டி சுயம்பு மகா மாரியம்மன் கோயில் உள்ளிட்டவற்றில் ஏராளமான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.

தட்டாரத் தெருவில் உள்ள பலப்பட்டறை மாரியம்மன் கோயிலில் காலை 6 மணிக்கு, அம்மனுக்கு பால், தயிா், நெய், தேன், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீா் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. பக்தா்கள் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வந்து அம்மனை தரிசனம் செய்தனா்.

ஆஞ்சநேயருக்கு அலங்காரம்: நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் ஆடி பெளா்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன்பின் மஞ்சள் ஆடை, மலா் மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி காட்சியளித்தாா். ஏராளமான பக்தா்கள் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT