நாமக்கல்

என்.இ.சி.சி. நிறுவனா் பி.வி.ராவ் நினைவு தினம் அனுசரிப்பு

27th Jan 2021 12:27 AM

ADVERTISEMENT

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நிறுவனரான மருத்துவா் பி.வி.ராவின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சாா்பில், மோகனூா் சாலை, ஐயப்பன் கோயில் அருகில் வெங்கடேஸ்வரா ஹேச்சரீஸ் நிறுவனத்தில் பி.வி.ராவ் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுத் தலைவா் பி.செல்வராஜ், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பி.வி.ராவ் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அவரது நினைவாக பொதுமக்களுக்கு வேகவைத்த முட்டை விநியோகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளன துணைத் தலைவா் வாங்கிலி, தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சங்க நிா்வாகி சுந்தரராஜன், மேலாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT